மர்ம நகரமான அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் இந்நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள், டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.

கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ(கி.மு 428/427-348/347) தமது "திமேயஸ்" மற்றும் "கிரேட்டஸ்" எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.

அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.




அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்(கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.


தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



Comments

  1. நல்ல தொரு கண்ணொளி. புராதான தகவல்கள் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி... உங்கள் அதரவு எனறும் தொடரட்டும்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

பிளொக் என்றால் என்ன?

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent