நீக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளிகள் திரும்ப பெறும் வசதி இப்பொது வாட்ஸ் ஆப்பில்


இன்;றைய நவீன காலகட்டத்தில் தரவுகள் என்பது நமக்கு முக்கியமான ஒன்று அதனை சேமித்து பாதுகாத்து வைப்பது என்பது அவசியமான ஒன்று சில வேளைகளில் அத் தகவல்கள்; அழிந்து போனால் நமக்கு அதை விட பெரிய இழப்பு வேறொன்றும் இல்லை எனவே நாங்கள் தகவல்களை திறம்பட பாதுகாக்க வேண்டியது நமது கடமை.


இன்று உலகில் உள்ள அனேகமானவர்களின் கைகளில் கையடக்க தொலைபேசி என்பது சர்வசாதரணமாக கையாளப்படுகின்றது அத்தகைய கையடக்க தொலைபேசிகள் பல்வேறு பட்ட செயலிகளை தரவிறக்கம்(டவுன்லோட்) செய்து நிறுவல் (இன்ஸ்ரோல்) செய்ய கூடிய வசதிகளும் உண்டு அத்தகைய பல்வேறு செயலிகளில் முக்கியமான ஒன்று வாட்ஸ்ஆப் இச் செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இச் செயலியில் பல்வேறு வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது குறுஞ்செய்திஇ பல்லூடகம் (மல்ட்டீமீடியா) செய்திகள் அனுப்புதல் பெறுதல் போன்ற பல்வேறு வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது தற்போது அனேகமான அலுவலக செயற்பாடுகள் இச் செயலி ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை முக்கிய அம்சமாக காணப்படுகின்றது.

அத்தகைய மிகவும் பயனுள்ள செயலியில் சேமித்து வைக்கப்படும் தகவல்கள் அறியாது அழிக்கப்பட்டால் பல்வேறு பிரச்சினை உண்டாக வாய்ப்புக்கள் உண்டு அத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக வாட்ஸ் குழுமத்தினர் புதிய ஒரு பதிப்பினை வெளியிட்டுள்ளனர். வாட்ஸ்ஆப் பீட்டா எனும் புதிய பதிப்பினூடாக சேர்க்கப்பட்டுள்ளது. இச் சேவையானது பதிப்புரிமை இலக்கம் 2.18.106 மற்றும் 2.18.115 இடையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது. தற்போது 2.18.105 பதிப்பு உபயோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

பிளொக் என்றால் என்ன?

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent