உங்களது பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க

சில நேரங்களில் உங்கள் பேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து காப்பதற்கு சில வழிகளை பின்பற்றலாம்.

இவை எப்போதும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விடயங்கள் ஆகும்.

1. கடவுச்சொல் பாதுகாப்பு: பேஸ்புக்கில் பயன்படுத்தும் கடவுச்சொல் கடினமானதாகவும், வேறு தளங்களில் பாவிக்காத கடவுச்சொல்லாகவும் இருக்க வேண்டும். நம்பர் மற்றும் ஸ்டிரிங்க் ஆகிவற்றையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது. குறைந்தது 6 எழுத்துக்கள் வருமாறு பாருங்கள்.

2. பிரைவட் பிரவுஸிங்க்: பேஸ்புக் பாவித்தபின்னர் லாக் அவுட் செய்து எப்போதும் உலாவியை பூட்டி விடுங்கள். Remember Me ஐ எப்போதும் செக் செய்யவே கூடாது.

3.மின்னஞ்சல் பாதுகாப்பு: பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் இலகுவாக நுழைந்துவிடலாம். இரண்டிற்கும் வேறு வேறு கடவுச்சொல்லை எப்போதும் தருவதே நல்லது.

4.பாதுகாப்பு கேள்விகள்: பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது சில பாதுகாப்பு கேள்விகள் கேட்பார்கள். இவை கடவுச்சொல்லை மறந்து விட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும். எனினும் இவற்றில் எப்போதும் கடினமான கேள்வி பதில்களை தேர்வு செய்யுங்கள்.

அவ்வாறு செய்யும் போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது. இதுவரை கேள்வி பதில்களை செட் செய்ய வில்லையாயின் Account Settings page சென்று அவற்றை உருவாக்கி கொள்வதே நல்லது.

5. எப்போதும் facebook.com சென்ற பின்னரே லொகின் செய்யுங்கள்: மின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புக்களில் லொகின் செய்ய வேண்டாம். மேலும் அறிந்து கொள்ள கீழ்கண்ட இணையதளத்திற்கு செல்லவும்.

Comments

  1. hi frnd hw r u???
    am frm tamilnadu
    i need some help...about BLOG
    pls help me........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

பிளொக் என்றால் என்ன?

Fire fox தற்பொழுது தமிழில்.