Posts

Showing posts from May, 2011

Google Chrome ஜ் இலகுவாக பயன்படுத்த‌

Image
இன்று பல வகையான உலவிகள் பயன்படுத்தபடுகின்றது இணைய பயன்பாட்டுக்கு உலவிகள் என்றாலே Chrome, Mozila firefox,Opera போன்ற உலவிகளே எம் நினைவுக்கு வரும். ஆனாலும் Chrஒமெ ஆனது இவை இரண்டையும் விட பிரபலம் அடைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த உலவியில் பல வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகிறது. இவற்றுள் ஒன்றே Shortcut Keys இவை இணையத்தை இலகுவாகவும் வேகமாகவும் பயன்படுத்த பயன்படுகிறது. இதற்காக உங்களுக்கு கீழே Shortcut key அட்டவணை தரப்படுகிறது Chrome உலவியை பயன்படுத்துபவர்கள் இதனை பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.

கணனியில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் (பாகம் 1)

Image
கணனியில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிரச்சினைகள் என்று ஒன்று இருந்தால் அதற்க்கு தீர்வு என்பது முக்கியமான ஒன்று இன்றைய பதிவில்  நாம் ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி நோக்குவோம். 1.கணணியை On செய்தவுடன் Monitar இல் Display வரவில்லை 2.V.G.A Card பழுது அடைந்த இருக்கலாம் V.G.A Card என்பது Monitar ஜ் Mother Board உடன் இணைப்பதன் முலம் அவற்றுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவியாகும் இக் கருவி பழுது அடைந்து இருந்தாலோ அல்லது அதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplayவராம்ல் இருக்கலாம். அதனால் V.G.A Card இனை சரி பார்பதாலோ அல்லது அதில் உள்ள தூசு துணிக்கைகளை அகற்றுவதன் முலமாகவோ Diplay வர வாய்ப்பு உண்டு 3.RAM பழுதடைந்து இருக்கலாம் பிரதானமான தற்காலிக நினைவகம் ஆகும். தரவுகளை செயன்முறைக்கு அனுப்பும் வரையும் தகவல்களை தகுந்த Device க்கு அனுப்பும் வரையும் இதன் செயன்முறை அமைந்து இருக்கும். மின் துண்டிப்பு ஏற்படும் போது சகல விடயங்களும் இழக்கப்படும். இது ஒரு Circuit வடிவில் அமைந்த ஒரு சிறிய கருவி ஆகும். இது பழுதுபடுவதாலோ அல்லது இதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplay வராம

C Cleaner இன் புதிய பதிப்பு அறிமுகம்

Image
C Cleaner  ஜ் கணணியில் நிறுவுவதன் முலம் கணணியின் வேகத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.   C Cleaner ஆனது கணணியில் உள்ள தேவையற்ற கோப்புக்களை அழித்து கணணியின் வேகத்தை அதிகரிக்கின்றது.. C Cleaner ஆனது  கணணியின் பிரதான தகவல்களை கொண்டு இருக்கும் C Drive ஜ் சுத்தமாக வைத்திருக்கவே இது பயன்படுகிறது.இது தற்காலிக கோப்பு(Temporary Files) தேவையற்ற கோப்புக்களையும்(Unused Files)அகியவற்றையும். இணையத்துடன் தொடர்பு கொள்ள பயன்படும் ப்ராவுசர்(Browser) களில் காணப்படும் Temporary Internet Files,History, Cookies, அகியவற்றையும் அழிக்க இது பயன்படுகிறது. இதனை பயன்படுத்தும் முறை பற்றி அடுத்து நோக்குவோம்.

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent

உங்களூக்கு தேவையான மென் பொருட்க்கள்,திரைப்படங்கள் மற்றும் பல வகைப்பட்டவற்றை இலவசமாக‌ Download செய்ய Torrent பயன்படுகிறது இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கணனியில் Bit Torrent எனும் மென் பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இதற்கான தரவிறக்க சுட்டி கீழே தரப்படுகிறது இதனை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம். இதனை நிறுவிக்கொள்வதன் மூலம் மென்பொருட்க்கள்,திரைப்படங்கள் மற்றும் பல வகைப்பட்டவற்றை தரவிறக்கம் செய்ய முடியும்.

பூமிக்கு வெளியே மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Image
பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.  பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார். 

Google cloud connect : இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு

கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. இந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த Google cloud connect இனை உங்கள் விண்டோஸ் கணணியில் நிறுவ இந்த முகவரியினை க்ளிக் செய்து நிறுவிக் கொள்ளலாம்.    இந்த சேவையானது தற்போதைக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இ

உங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு

கணணி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் வேலைகளை சுலபமாக்குவதற்கு கணணி பயன்படுகிறது. கணணி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணணியின் சில அடிப்படை விடயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும். ஆகவே நம் கணணி பழுதானால் சர்வீஸ் இன்ஜினியர் என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிட்டு அவன் கேட்கிற தொகையை கொடுத்துடுவோம். அவனும் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு பொய் சொல்லி காசை கறந்து விடுவான். ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணணியை பற்றி சில அடிப்படை விடயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு சூப்பர் இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணணியின் அனைத்து விவரங்களும் வரும். இந்த மென்பொருளினால் கணணியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML கோப்புகளாக உங்கள் கணணிய

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு

Image
நம்மில் பலர் இணையத்தை இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம். இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offlineல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும். இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம். அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும். மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும். முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click ne

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

Image
விண்டோஸ் பவர் ஓப்ஸன்கள் மூலம் கணணியை Sleepஇற்கு செல்லவிடாமல் Stand Byயிலேயே வைத்திருப்பதற்கு அதிக வசதிகள் இல்லை. அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணணியை அணையவிடாமல் வைத்திருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு முறையும் பவர் ஓப்ஸனை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். இதற்காகவே Coffee என்ற டூல் பயன்படுகிறது. இந்த போர்டபிள் டூலை ரன் செய்து தேவையான KB அளவையும் தேர்வு செய்துவிட்டால் குறிப்பிட்ட தரவிறக்கம் முடியும் வரை கணணி அணையாமல் வேலை செய்தபடி இருக்கும். தரவிறக்க சுட்டி

VLC மீடியா பிளேயர்: புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய

Image
VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகப் பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணணியில் விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டு இருக்கும். ஆனால் அதில் நிறைய வீடியோ போர்மட்டுகளை பார்க்க முடியாது. அதற்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோகப்படுத்துகிறோம். இதில் பெரும்பாலான போர்மட்டுகளில் வீடியோக்களையும், ஓடியோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.9 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான 1.1.7, 1.1.8 உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். தரவிறக்க சுட்டி

உபுண்டு 11.04 தொகுப்பை தரவிறக்கம் செய்ய

Image
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கெனோனிகளின் தயாரிப்பான வேகமாக வளர்ந்து வரும் உபுண்டு இயக்குதளத்தின் புதிய தொகுப்பான "உபுண்டு 11.04" தற்போது வெளியாகியுள்ளது. உபுண்டு ஒரு திறந்த ஆணைமூல மென்பொருளாகும். அதாவது(Open source) ஆகும். கணணி உலகில் விண்டோஸ் இயக்குதளத்தின் ஆதிக்கமே காணப்படுகின்ற போதிலும் அதற்கு சரியான போட்டியளிக்க வல்லதாக உபுண்டு கருதப்படுகின்றது. இப்புதிய தொகுப்பின் மூலம் பாவனையாளர்கள் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியுமென அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. இதனை பாவையாளர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்க சுட்டி