Thursday, November 3, 2011

மின்சாரம் இல்லாமல் வெளிச்சம் பெறுவதற்க

மின்சாரம் இன்றைய காலங்களில் மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசிய தேவையாக காணப்படுகிறது.இனி வரும் காலங்களில் உலகத்தில் இருக்கும் பாரிய பற்றாக்குறையாக மின்சார பற்றாக்குறை ஏற்படப்போகிறது இதனை நிவர்த்தி செய்ய புதியதோர் முயற்சியை கையாண்டார்கள் சில இளைஞர்கள் அது இப்போது வெற்றியும் அளித்துள்ளது. மின்சார தேவை ஆனது காலங்கள் செல்ல செல்ல அதிகரித்த வண்ணமே உள்ளது இதனை ஈடு செய்வதற்கு இப்படியான கண்டுபிடிப்புக்களை இனி வரும் காலங்களில் கண்டுபிடிப்பதன் முலமே மின்சார பற்றாக்குறையை தீர்த்துக் கொள்ளலாம்.

Thursday, October 27, 2011

பிளொக் என்றால் என்ன?

பிளொக் என்றால் இதுவும் ஒரு இணையத்தளம் போன்ற ஒன்றே அனுகூலம் என்னவெனில் கொம்(com) நெற்(net) போன்ற டொமைன்களில் இணையத்தை உருவாக்கும் போது அதற்காக நீங்கள் பணம் அறவிடவேண்டிய தேவை உள்ளது. ஆனால் பிளாக் இணையத்தளங்களுங்களுக்கு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை அதுமட்டுமின்றி உங்கள் விருப்பத்துக்கு ஏற்றறாற் போல் இணையத்தளங்களை வடிவமைத்தது கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீங்கள் சிறந்த எழுத்தாளராக இருந்தால்அதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவும் இவ் பிளாக் பயன்படுகிறது.
இதனை பயன்படுத்த இப்போது உங்களுக்கு ஆவலாக உள்ளதா? இதற்காக நீங்கள் எங்கும் செல்லத்தேவையில்லை கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள் உங்கள் எழுத்தாற்றலை மற்றும் உங்கள் கனவினை இதனை நிறைவேற்றி கொள்ளலாம்    www.blogger.com , www.wordpress.com

வணக்கம் நண்பர்களே

வணக்கம் நண்பர்களே வேலைப்பளு காரணமாக பதிவு உலகத்துக்கு வர முடியவில்லை இனி வரும் காலங்களில் பதிவு உலகத்தில் என் பார்வை எப்போதும் இருக்கும். இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப செய்திகள் மட்டுமின்றி ஏனைய வகையான செய்திகளும் என் பதிவில் உள்ளடக்கப்படும் என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன். முன்பு தந்த ஒத்துழைப்பை மீண்டும் எனக்கு வழங்குமாறு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

உங்கள் அன்புப் பதிவர். நிறூஜ்

Monday, August 8, 2011

Fire fox தற்பொழுது தமிழில்.
இன்றைய                                                                                                                              இணைய பாவனைக்கு பல்வேறு வகையான உலவிகள் பயன்படுகிறது
இவ்வாறு பயன்படுத்தபடும் உலவிகள் ஆங்கில மொழியிலேயே உலவி தரவுகளை தருகின்றது. ஆனால் Fire fox உலவி தமது உலவி பதிப்பில் முதன்முறையாக தமிழ் வடிவிலான உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது
இந்த உலவியை பயன்படுத்துவதன் முலம் எமது இணைய சேவையை வேகமாக தொடரவும் பயன்படுகிறது

Thursday, July 21, 2011

Google + நண்பர்களைஒன்றுசேர்க்கும்இணையம்சமுக வலைத்தளங்கள் பல உள அவற்றுள் Facebook. Twitter,My space என்பன அடங்குகின்றன. தற்பொழுது Googlஎ நிறுவனம் புதிதான ஒரு சமுக வலைத் தள சேவையை ஆரம்பித்துள்ளது அது தான் Google +
இதன் முலம் நண்பர்களை இணைக்கும் செயற்பாட்டில் Googலெ இறங்கி உள்ளது.
இத் தளமும் இப்போது நண்பர்களிடையே மிக பிரபல்யம் அடைந்து காணப்படுகிறது.

கீழே உள்ள தரவுச் சுட்டியை பயன்படுத்தி பயன்படுத்தி நீங்கள் அச் சேவையில் இணைந்து உங்கள் நண்பர்களோடு இணைந்து கொள்ளலாம்.

தரவுச்சுட்டி

Sunday, May 29, 2011

Google Chrome ஜ் இலகுவாக பயன்படுத்த‌

இன்று பல வகையான உலவிகள் பயன்படுத்தபடுகின்றது இணைய பயன்பாட்டுக்கு
உலவிகள் என்றாலே Chrome, Mozila firefox,Opera போன்ற உலவிகளே எம் நினைவுக்கு வரும். ஆனாலும் Chrஒமெ ஆனது இவை இரண்டையும் விட பிரபலம் அடைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த உலவியில் பல வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகிறது. இவற்றுள் ஒன்றே Shortcut Keys
இவை இணையத்தை இலகுவாகவும் வேகமாகவும் பயன்படுத்த பயன்படுகிறது.

இதற்காக உங்களுக்கு கீழே Shortcut key அட்டவணை தரப்படுகிறது Chrome உலவியை பயன்படுத்துபவர்கள்
இதனை பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.Tuesday, May 24, 2011

கணனியில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் (பாகம் 1)
கணனியில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிரச்சினைகள் என்று ஒன்று இருந்தால் அதற்க்கு தீர்வு என்பது முக்கியமான ஒன்று
இன்றைய பதிவில்  நாம் ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி நோக்குவோம்.1.கணணியை On செய்தவுடன் Monitar இல் Display வரவில்லை

2.V.G.A Card பழுது அடைந்த இருக்கலாம்

V.G.A Card என்பது Monitar ஜ் Mother Board உடன் இணைப்பதன் முலம்
அவற்றுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவியாகும்
இக் கருவி பழுது அடைந்து இருந்தாலோ அல்லது அதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplayவராம்ல் இருக்கலாம். அதனால் V.G.A Card இனை சரி பார்பதாலோ அல்லது அதில் உள்ள தூசு துணிக்கைகளை அகற்றுவதன் முலமாகவோ Diplay வர வாய்ப்பு உண்டு

3.RAM பழுதடைந்து இருக்கலாம்

பிரதானமான தற்காலிக நினைவகம் ஆகும். தரவுகளை செயன்முறைக்கு அனுப்பும் வரையும் தகவல்களை தகுந்த Device க்கு அனுப்பும் வரையும் இதன் செயன்முறை அமைந்து இருக்கும். மின் துண்டிப்பு ஏற்படும் போது சகல விடயங்களும் இழக்கப்படும். இது ஒரு Circuit வடிவில் அமைந்த ஒரு சிறிய கருவி ஆகும். இது பழுதுபடுவதாலோ அல்லது இதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplay வராமல் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. அதனால் தூசு துணிக்கைகளை அகற்றுவதன் மூலமோ அல்லது அதனை சரி பார்ப்பதாலோ Diplay வர வாய்ப்பு உண்டு.


4.Monitar பழுது அடைந்து இருக்கலாம்
   Monitar இனை சரி பார்க்கவும்.

5.Monitar Power Switch On செய்ய பட்டுள்ளதா என சரி பார்க்கவும்

6.Monitar இன் Control Button ஜ் சரி பார்க்கவும் (Brightness, Contrast)

7.Monitar இன் Data Cable ஒழுங்கான முறையில் இணைக்க பட்டுள்ளதா என சரி பார்ககவும்

Sunday, May 22, 2011

C Cleaner இன் புதிய பதிப்பு அறிமுகம்C Cleaner  ஜ் கணணியில் நிறுவுவதன் முலம் கணணியின் வேகத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.   C Cleaner ஆனது கணணியில் உள்ள தேவையற்ற கோப்புக்களை அழித்து கணணியின் வேகத்தை அதிகரிக்கின்றது..

C Cleaner ஆனது  கணணியின் பிரதான தகவல்களை கொண்டு இருக்கும் C Drive ஜ் சுத்தமாக வைத்திருக்கவே இது பயன்படுகிறது.இது தற்காலிக கோப்பு(Temporary Files) தேவையற்ற கோப்புக்களையும்(Unused Files)அகியவற்றையும். இணையத்துடன் தொடர்பு கொள்ள பயன்படும்
ப்ராவுசர்(Browser) களில் காணப்படும் Temporary Internet Files,History, Cookies, அகியவற்றையும் அழிக்க இது பயன்படுகிறது. இதனை பயன்படுத்தும் முறை பற்றி அடுத்து நோக்குவோம்.

Thursday, May 19, 2011

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent

உங்களூக்கு தேவையான மென் பொருட்க்கள்,திரைப்படங்கள் மற்றும் பல வகைப்பட்டவற்றை இலவசமாக‌ Download செய்ய Torrent பயன்படுகிறது
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கணனியில் Bit Torrent எனும் மென் பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

இதற்கான தரவிறக்க சுட்டி கீழே தரப்படுகிறது இதனை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம். இதனை நிறுவிக்கொள்வதன் மூலம் மென்பொருட்க்கள்,திரைப்படங்கள் மற்றும் பல வகைப்பட்டவற்றை தரவிறக்கம் செய்ய முடியும்.

Monday, May 16, 2011

பூமிக்கு வெளியே மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார். 

பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார். 


Sunday, May 15, 2011

Google cloud connect : இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு


கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது.
இந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த Google cloud connect இனை உங்கள் விண்டோஸ் கணணியில் நிறுவ இந்த முகவரியினை க்ளிக் செய்து நிறுவிக் கொள்ளலாம்.  இந்த சேவையானது தற்போதைக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இல் சேமித்துக் கொள்ள முடியும்.

இந்த புதிய சேவையினை பயன்படுத்தி உங்கள் ஆவணங்களினை இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கும் எப்போதும் ஆவணங்களினை பயன்படுத்தும் வசதியினை பெற்றுக்கொள்ளுங்கள்.

மின்சாரம் இல்லாமல் வெளிச்சம் பெறுவதற்க

மின்சாரம் இன்றைய காலங்களில் மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசிய தேவையாக காணப்படுகிறது.இனி வரும் காலங்களில் உலகத்தில் இருக்கும் பாரிய பற்றாக்க...