Posts

Showing posts from April, 2011

புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் குரோம் 11 அறிமுகம்

Image
இணைய பிரவுசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாசகர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி கொண்டுள்ளனர். தற்போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 9 என்ற புதிய பதிப்பை வெளியிட்டது. கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய பதிப்பான Google Chrome 11 என்பதை வெளியிட்டுள்ளது. எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோமில் உள்ளது. அதாவது கூகுள் குரோம் பிரவுசர் புதிய பதிப்பை வெளியிட்டவுடன் குரோம் உலவியை பயன்படுத்துபவரின் அனைவருக்கும் இந்த உலவி தானாகவே அப்டேட் ஆகிவிடும். உங்களுடைய பிரவுசர் அப்டேட் ஆகிவிட்டதா என அறிய வேண்டுமென்றால் Settings - About Google Chrome க்ளிக் செய்து உங்களுக்கு வரும் விண்டோவில் கூகுள் குரோம் பதிப்பை பார்க்கவும். மேலே குறிப்பிட்டது போன்று இருந்தால் உங்கள் உலவி அப்டேட் ஆகிவிட்டது. இது போல இல்லாமல் அப்டேட் ஆகவில்லை என்றாலும் உலவி தானாகவே அப்டேட் ஆக தொடங்கும். இந்த இரண்டு முறைகளிலும் அப்டேட் ஆகவில்லை என்றால் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். புதிய பதிப்பில் உள்ள ஆச்சரியமான வசதி HTML 5 Speech API. நம்மில் பெரும்பாலானோர் API எனப்படும் embeded form நம் பிளாக்கில் நிருவியிர...

கணணியில் டிரைவர்களை மாற்றம் செய்ய

கணணியின் இயங்குதளம் மற்றும் வன்பொருள்களான விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவற்றுடன் தொடர்பு கொள்வதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். பொதுவான கருவிகளுக்கான டிரைவர்கள் இயங்குதளத்திலேயே கிடைக்கப்பெறும். புதியதாக ஏதேனும் கருவியை நிறுவினால் வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களால் வழங்கப்படும். கணணியில் இவை கட்டாயம் இருந்தால் தான் வன்பொருட்கள் முறையாக வேலை செய்யும். கணணியில் குறிப்பிட்ட கால பயன்பாட்டுக்குப் பிறகு டிவைஸ் டிரைவர்களை(Device drivers) அப்டேட் செய்ய வேண்டும். ஏன் என்றால் மென்பொருள்களுக்கு அப்டேட் இருப்பது போல வன்பொருள்களையும் அப்டேட் செய்வது கணணியின் திறனையும் கருவிகளின் உறுதிப்பாட்டையும் அதிகரிக்கின்றன. சிலரின் கணணியில் என்னென்ன நிறுவப்பட்டுள்ளது, எவை சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. சில கணணிகளின் குறிப்பிட்ட வன்பொருள்களுக்கு டிரைவரே இருக்காது. இதனால் டிரைவர் கோப்புகளைத் தேடி இணையதளங்களில் தேடி அலைய வேண்டியதில்லை. இதற்கென இருக்கும் ஒரு இலவச மென்பொருள் Device Doctor. இந்த மென்பொருள் பெரும்பாலான...

உங்களது பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க

சில நேரங்களில் உங்கள் பேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து காப்பதற்கு சில வழிகளை பின்பற்றலாம். இவை எப்போதும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விடயங்கள் ஆகும். 1. கடவுச்சொல் பாதுகாப்பு: பேஸ்புக்கில் பயன்படுத்தும் கடவுச்சொல் கடினமானதாகவும், வேறு தளங்களில் பாவிக்காத கடவுச்சொல்லாகவும் இருக்க வேண்டும். நம்பர் மற்றும் ஸ்டிரிங்க் ஆகிவற்றையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது. குறைந்தது 6 எழுத்துக்கள் வருமாறு பாருங்கள். 2. பிரைவட் பிரவுஸிங்க்: பேஸ்புக் பாவித்தபின்னர் லாக் அவுட் செய்து எப்போதும் உலாவியை பூட்டி விடுங்கள். Remember Me ஐ எப்போதும் செக் செய்யவே கூடாது. 3.மின்னஞ்சல் பாதுகாப்பு: பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் இலகுவாக நுழைந்துவிடலாம். இரண்டிற்கும் வேறு வேறு கடவுச்சொல்லை எப்போதும் தருவதே நல்லது. 4.பாதுகாப்பு கேள்விகள்: பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது சில பாதுகாப்பு கேள்விகள் கேட்பார்கள். இவை கடவுச்...